X
ஈரோட்டில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்தவர் இருவரை கைது செய்தனர்
சட்டவிரோத மது விற்பனையை தடுக்க மாவட்ட போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.அதனடிப்படையில், திங்களூர் நேற்று தங்களது காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கண்காண்ப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது, செல்லப்பம்பாளையம், மயானத்தின் அருகில், அரசு மதுபாட்டில்களை சட்டவிரோதமாக பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்த திங்களூர், அம்மன் நகரை சேர்ந்த பழனிசாமி (49) என்பவர் மீது வழக்குப் பதிவு செய்து, கைது செய்தனர். அவரிடமிருந்து 6 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.அதேபோல, வரப்பாளையம் போலீசார், தங்களது காவல் எல்லைக்குட்பட்ட மேட்டுக்கடை பார்க் நகர், தண்ணீர் தொட்டி அருகில் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்டிருந்த ராம நாதபுரம் மாவட்டம், திருவாடனையை அடுத்துள்ள புளியல் பகுதியை சேர்ந்த கார்த்திக் (32) எனபவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். அவரிடமிருந்த 10 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.
Next Story