காங்கேயம் நகர அ.தி.மு.க. பூத் கமிட்டி பணிகள் சரிபார்ப்பு முகாம்

X
காங்கேயம் அ.தி.மு.க. சட்டமன்ற தொகுதியில் பூத் கமிட்டி பணிகள் சரிபார்க்கும் முகாம் காங்கேயம் என்.எஸ்.என். திருமண மண்டபத்தில் நேற்று இரவு நடைபெற்றது. காங்கேயம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என்.எஸ்.என். நடராஜ் மற்றும் நகர செயலாளர் வெங்கு ஜி.மணிமாறன் ஆகி யோர் தலைமையில் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. மற்றும் கிணத்துக்கடவு தாமோதரன் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இதில் பொள்ளாச்சி வ.ஜெயராமன் பேசியதாவது:- ஏழை பணக்காரன் என்ற எந்த வேறுபாடும் இல்லாமல் அனைவருக்கும் சமத்துவமானது அ.தி.மு.க. ஒரு பூத்துக்கு 9 பேர் உள்ளனர். ஒவ்வொருவரும் தலா 100 ஓட்டுகள் என பிரித்து கொண்டு தினசரி மாலை நேரம் வீடுவீ டாக சென்று வாக்காளர்களை சந்தித்து அ.தி.மு.க.விற்கு வாக்களிக்க வைக்க வேண்டும். அது நமது கடமை. அ.தி.மு.க. ஆட்சிதான் மக்களுக்கான ஆட்சி. இன்று வரை நிறைவேற்றப்படாமல் இருக்கும் ஆனைமலை- நல் லாறு, பவானிசாகர் அணை ஆகிய திட்டங்கள் அனைத்தும் எடப்பாடி பழனிசாமி நிறைவேற்றுவார். இவ்வாறு அவர் பேசினார். இதனை தொடர்ந்து நகரப்பகுதியில் 34 பூத்துகள், ஒன்றியத்தில் 3 பூத்துகள் என மொத்தம் 37 பூத்துகளை மாவட்ட இணைச்செயலாளர் சங்கீதா சந்திர சேகர், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணை செயலாளர் பி.பாலசுப்பிரமணி, மாவட்ட அண்ணா தொழிற்சங்க இணைச் செயலாளர் பி.பொன்னுசாமி ஆகியோர் ஆய்வு செய்தனர். மாவட்ட பொருளாளர் கே.ஜி.கே.கிஷோர்குமார், மாவட்ட துணைச் செயலாளர் லட்சுமிசோமசுந்தரம், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர்கள் சி.கந்தசாமி, ஏ.பி.துரைசாமி உள்பட பூத் கமிட்டி பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர். இந்த நிகச்சியில் 600க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
Next Story

