X
போலீசார் நடவடிக்கை
சேலம் கிச்சிப்பாளையம் கடம்பூர் முனியப்பன் கோவில் தெருவை சேர்ந்தவர் சூர்யா (வயது 25). இவர் சுப்பிரமணிய நகரில் கவரிங் கடை வைத்துள்ளார். சம்பவத்தன்று அவருடைய வீட்டுக்கு 5 பேர் சென்றனர். பின்னர் அவர்கள் சூர்யாவிடம் ரூ.1 லட்சம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. ஆனால் அவர் பணம் கொடுக்க மறுத்துள்ளார்.. இதையடுத்து சூர்யாவை அவர்கள் அதே பகுதியில் உள்ள பாழடைந்த கட்டிடத்துக்கு அழைத்து சென்று தாக்கினர். இதுகுறித்து சூர்யா கிச்சிப்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது சூர்யாவிடம் பணம் கேட்டு தாக்கியது அதேபகுதியை சேர்ந்த முகமது அலி (53), ஆசிக் அலி (25), இர்பான் அலி (21), அப்துல் அஜித் (25), முகமது பிலால் (20) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 5 பேரையும் போலீசார் நேற்று கைது செய்தனர்.
Next Story