மாரியம்மன்
தர்மபுரி மாவட்டம் கடத்தூரில் ஸ்ரீ மாரியம்மன் காளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு திங்கட்கிழமை கொடியேற்றி கங்கணம் கட்டியும் சாமி அழைப்பு நடைபெற்றது இன்று காலை பம்பை வாத்தியங்களுடன் அம்மனுக்கு பால்குட ஊர்வலம் அரூர் ,பொம்மிடி, கடத்தூர் உள்ளிட்ட சாலைகளின் வழியாக ஊர்வலம் கோவிலிலை வந்தடைந்த உடன் பெரிய கொப்பரைகளில் அனைத்து பக்தர்களின் பால் மற்றும் கூல் அமுதினை கலக்கி சாமிக்கு சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகம் நடைபெற்றது. பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு விழா ஏற்பாடுகளை கோவில் விழா குழுவினர் செய்திருந்தனர். இதனை அடுத்து கடத்தூர் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Next Story





