
X
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே வந்தே பாரத் ரயில் மீது கல் வீச்சு -கண்ணாடி சேதம் மர்ம நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நாகர்கோவிலில் இருந்து சென்னை நோக்கி செல்லும் வந்தே பாரத் ரயில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ரெயில்வே நிலையத்தை கடந்து வேலாயுதபுரம் அருகே சென்றபோது வந்தே பாரத் ரயில் மீது மர்ம நபர்கள் கல் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.இதில் வந்தே பாரத் ரயிலின் சி 16 பெட்டியின் கண்ணாடி சேதமடைந்துள்ளது. இதுகுறித்து ரயில்வே பாதுகாப்பு படை போலீஸார் வழக்குப்பதிந்து வந்தே பாரத் ரயிலின் மீது கல் வீசி கண்ணாடியை சேதப்படுத்திய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
Next Story

