
X
தூத்துக்குடியில் உள்ள அதிமுக மாநில வர்த்தக அணி அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் செல்லபாண்டியன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் பேசும்போது திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு அமைப்பாளரும் தமிழக அமைச்சருமான ராஜா நான்காண்டு காலம் தமிழக முதல்வராக சிறப்பாக ஆட்சி செய்த எடப்பாடி பழனிச்சாமி குறித்து அவதூறு செய்திகளை சமூக வலைத்தளங்கள் பரப்பி உள்ளார். இதற்கு அவர் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லையென்றால் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனைப்படி திமுக அமைச்சர் ராஜாக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட உள்ளது என அவர் தெரிவித்தார். மேலும் பிஜேபி கூட்டணியில் அதிமுக இணைந்தது குறித்து பேச திமுகவுக்கு அருகதை இல்லை என் என்றால் அவர்கள் பிஜேபி கூட்டத்திலிருந்து அமைச்சராக பதவி பெற்றவர்கள் தான் ஏற்றார் மேலும் திமுக தேர்தலில் கொடுத்த வாக்குறுதி ஏதும் தமிழக முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றப்பட நிறைவேற்றவில்லை என குற்றம் சாட்டினார்.
Next Story

