தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே பரமன்குறிச்சி சமத்துவபுரத்தை சேர்ந்த முத்துக்குமார் மகன் முத்துகிருஷ்ணன் (15). இவர் பரமன்குறிச்சி கஸ்பாவில் உள்ள அரசு உதவி பெறும் கே.கே.ஆர் உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று வீட்டுப்பாடம் எழுதி வராததால் பள்ளி தலைமை ஆசிரியர் சத்யா(எ) ஞானசுந்தரி மாணவனை கையில் கம்பால் அடித்ததாக கூறப்படுகிறது. மேலும் இதுகுறித்து வீட்டில் தெரிவித்துள்ளார். மனம் உடைந்த மாணவன் என் சாவுக்கு ஆசிரியர்கள் பியூலா, மேரி, வளர்மதி, மற்றும் தலைமை ஆசிரியர் சத்யா (எ) ஞானசுந்தரி ஆகிய நான்கு ஆசிரியர்கள் தான் காரணம் கடிதம் எழுதி சட்டை பையில் வைத்துவிட்டு நேற்று இரவு வீட்டின் பின்பு உள்ள அஸ்படாஸ் சீட்டில் சேலை மூலம் தூக்கிட்டு உள்ளார். இதனை பார்த்த பெற்றோர் மாணவனை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனை கொண்டு சென்றுள்ளனர் அங்கு பரிசோதித்த மருத்துவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து திருச்செந்தூர் தாலுகா போலீசார் மாணவன் எழுதிவைத்த கடிதத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவன் முத்துகிருஷ்ணனை அடித்த ஆசிரியர் நான்கு பேர் மீது நடவடிக்கை எடுக்கும்படி தாய் கண்ணீர் மல்க தெரிவித்தார்.
Next Story



