X
ஆறுமுகனேரியில் காா் கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பம் மீது மோதியதில் 2 போ் பலத்த காயம் அடைந்தனா். 3 வாகனங்கள் சேதம் அடைந்தன.
ஆறுமுகனேரியில் காா் கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பம் மீது மோதியதில் 2 போ் பலத்த காயம் அடைந்தனா். 3 வாகனங்கள் சேதம் அடைந்தன. தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகனேரி பாரதிநரை சோ்ந்த பழ வியாபாரியான சசிகுமாா் தனது குடும்பம் மற்றும் உறவினா் ராஜேஷ் என்பவருடன் ஆறுமுகனேரி மெயின் பஜாா் காயல்பட்டினம் சாலையில் உள்ள பேன்சி ஸ்டோரில் பொருள்கள் வாங்குவதற்காக காரில் வந்துள்ளனா். காரை ஓட்டி வந்த ராஜேஷ், சாலையோரமாக நிறுத்த முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்து அங்கு நிறுத்தப்பட்டிருந்த பைக், சைக்கிள் ஆகியவற்றை இடித்துக்கொண்டு மின் கம்பம் மீது மோதி நின்றது. இதில் மூன்றும் சேதமடைந்தன. மேலும் காரை ஓட்டி வந்த ராஜேஷ், சசிகுமாா் இருவரும் பலத்த காயமடைந்தனா். அவா்களை அக்கம் பக்கத்தினா் உதவியுடன் உறவினா்கள் மீட்டு காயல்பட்டினம் தனியாா் மருத்துவமனையில் முதலுதவி அளித்து, பின்நா் திருச்செந்தூா் தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். விபத்து குறித்து தகவலறிந்த ஆறுமுகனேரி காவல் உதவிஆய்வாளா் வாசுதேவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்சு சென்று காரை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். ஆறுமுகனேரி உதவி மின் பொறியாளா் ஜெபஸ் சாம் தலைமையில் பணியாளா்கள் சேதமடைந்த மின் கம்பத்தை மாற்றி புதிய மின் கம்பத்தை நட்டு மின் விநியோகத்தை சீரமைத்தனா்.
Next Story