X
இன்ஜினியர் ராஜாசிதம்பரம் என்பவர் சமயோசிதமாக செயல்பட்டு கட்டுமான பயன்பாட்டிற்கு வைத்திருந்த பைப்பிலிருந்துதண்ணீரை பீச்சி அடித்ததன் மூலமும், அருகே இருந்த கருடா ஜுவல்லரி நகைக்கடையில் இருந்து தீயணைப்பானை கொண்டும் தீயை மேலும் பரவாமல் தடுத்து நிறுத்தி கட்டுக்குள் கொண்டு வந்தனர்
பெரம்பலூர் கலெக்டர் ஆபீஸ் சாலையில் உள்ள யாயா டீக்கடையில், சிகரெட் குடித்தவர் நெருப்பை அணைக்காமல் விட்டதால் திடீரென இன்று காலை தீப்பொறி சுவாலைபிடித்து எரியத் தொடங்கியது. அதன் அருகில் கட்டிட வேலை செய்து கொண்டிருந்த இன்ஜினியர் ராஜாசிதம்பரம் என்பவர் சமயோசிதமாக செயல்பட்டு கட்டுமான பயன்பாட்டிற்கு வைத்திருந்த பைப்பிலிருந்துதண்ணீரை பீச்சி அடித்ததன் மூலமும், அருகே இருந்த கருடா ஜுவல்லரி நகைக்கடையில் இருந்து தீயணைப்பானை கொண்டும் தீயை மேலும் பரவாமல் தடுத்து நிறுத்தி கட்டுக்குள் கொண்டு வந்தனர். கடை ஊழியர்கள் வெடிக்கக் கூடிய சிலிண்டர் உள்ளிட்ட பொருட்களை கடையில் இருந்து வெளியே எடுத்து வந்து பாதுகாப்பாக வைத்தனர். இதனால்இன்று அப்பகுதியில் நடக்க இருந்த பெரும் தீவிபத்து தவிர்க்கப்பட்டது. பின்னர், வந்த தீயணைப்பு துறையில் கீற்றுக் கொட்டகை முழுவதும் தண்ணீரை பீய்ச்சி அடித்தனர்.
Next Story