X
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உரிய நீதி கேட்டு உறவினர்கள் புகார்
திருச்சி மாவட்டம், முசிறி வட்டம் நாச்சம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் வடமலை (45). விவசாய தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் சிறுகாம்பூர் கிராமத்திற்கு வயல் வேலைக்கு சென்றுள்ளார் . அப்போது வயல்வெளியில் எதிர்பாராத விதமாக மின் கம்பி அறுந்து விழுந்ததில் மின்சாரம் தாக்கி பரிதபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்த பொதுமக்கள் மற்றும் காவல் துறை உதவியுடன் இறந்த வடமலை உடலை மீட்டு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் இறந்த வடமலையின் மகன் தந்தை இறந்த தகவல் அறிந்து குவைத்தில் இருந்து புறப்பட்டு திருச்சி வந்தார். பிறகு நேற்று காலை ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு உடலை வாங்க சென்ற வடமலையின் மகன் செல்வராசு மற்றும் உறவினர்கள் உடலை கேட்டபோது மருத்துவமனை நிர்வாகத்தினர் உங்களுடைய உறவினர்கள் ஏற்கனவே வந்து உடலை வாங்கி சென்று விட்டனர் என்று கூறியுள்ளனர். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த செல்வராஜ் மற்றும் அவரது உறவினர்கள் நாங்கள் வராமல் எப்படி உடலை கொடுத்தீர்கள் என்று கேட்டு சத்தம் போட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது பிறகு செல்வராஜ் தன்னுடைய தந்தை வடமலையின் உடலை காணவில்லை என்று அதனை மீட்டு தர வேண்டும் என்றும்,மின்சாரம் தாக்கி இறந்த தந்தையின் சாவில் மர்மம் இருப்பதாக கூறியும் அரசு நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் புகார் மனு கொடுத்தார். அதனைத் தொடர்ந்து திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தன்னுடைய தந்தை இறப்புக்கு உரிய நீதி பெற்று தர வேண்டும் என கூறி மனு அளித்தனர்
Next Story