X
தூத்துக்குடி 'உயிர் மூச்சு' திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றிவிழாவை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர்
தூத்துக்குடி 'உயிர் மூச்சு' திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றிவிழாவை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர். தூத்துக்குடி மாவட்டத்தில் முழுக்க முழுக்க படமாக்கப்பட்ட 'உயிர் மூச்சு'. திரைப்படம் கடந்த ஏப்ரல் 3ஆம் தேதி தூத்துக்குடி கிளியோபாட்ரா திரையரங்கில் வெளியிடப்பட்டது. மது விலக்கின் அவசியத்தை வலியுறுத்துவதுடன், மாரடைப்பு முதலுதவி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உருவாகி உள்ளது. மேலும் இந்த திரைப்படத்தில் தூத்துக்குடியை சேர்ந்த காமெடி நடிகர் சுமங்கலி சதீஷ், தனது காமெடி திறமையை வெளிப்படுத்தி உள்ளார். அவரது காமடி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்துள்ளது . இத்திரைப்படத்தை, திரைப்பட துறையினரும், பல்வேறு அமைப்பினரும் பாராட்டி வருகின்றனர். மேலும், பொதுமக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு ஏற்பட்டுள்ளது. உயிர் மூச்சு திரைப்படம் வெளியிடப்பட்டு 100 நாளை நிறைவு செய்துள்ளது. இதையடுத்து, தூத்துக்குடி ஜோரா சினிமாஸ் அலுவலகத்தில் படக்குழுவினர் கேக் வெட்டியும், சால்வை அணிவித்தும் கொண்டாடினர். இந்நிகழ்ச்சியில் திரைப்பட இயக்குனர் பிராட்வே சுந்தர், தயாரிப்பாளர் மெர்சி ரோஸ்லின் ஜோதிமணி, வசனகர்த்தா விவசாயி ஆர்.ஜோதிமணி, நடிகர்கள் செங்குட்டுவன், ராஜ்கபூர், ஜெயம், சுமங்கலி சதீஷ், ராஜேந்திரபூபதி, சிவசு, ஜெகஜீவன், அழகு கலை சங்க தலைவர் எம்.தங்கஈஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story