
X
சேலம் மாவட்டம் தாரமங்கலம் நகராட்சி 17-வது வார்டு பகுதியைச் சேர்ந்தவர் சீரங்கன் (வயது56). தொழிலாளி. இவரது மைத்துனர் ஈஸ்வரன். தி.மு.க. பிரமுகர். இவர்கள் 2 பேரும், சில வருடங்களுக்கு முன்பு கூட்டாக நூல்பாவு கடை வைத்து தொழில் செய்தனர். அதில் 2 பேருக்கும் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. சம்பவத்தன்று ஈஸ்வரன் மற்றும் அவரது நண்பர் சீரங்கனூரை சேர்ந்த சேட்டு ஆகியோர் சீரங்கனிடம் தகராறு செய்துள்ளனர். அப்போது சேட்டு தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தினார். பின்னர் 2 பேரும் அங்கிருந்து தப்பியோடி விட்டனர். படுகாயம் அடைந்த சீரங்கனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் ஈஸ்வரன், சேட்டு ஆகிய 2 பேரையும் தாரமங்கலம் போலீசார் கைது செய்தனர்.
Next Story

