
X
அருப்புக்கோட்டையில் பெயிண்டர் கொலை வழக்கில் அதே பகுதியை சேர்ந்த இருவர் கைது; முன் விரோதம் காரணமாக கொலை செய்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை சக்தியவாணி முத்து நகரை சேர்ந்தவர் சுரேஷ் குமார் என்பவர் மகன் திணேஷ் குமார் (24) இவர் பெயிண்டிங் வேலை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் திணேஷ் குமார் சத்தியவாணி முத்து நகர் காலனி அருகே உள்ள தனியார் மதுபான பார் அருகே அமர்ந்திருந்தார். அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த தேவா(54) மற்றும் டேவிட்(39) ஆகிய இருவர் தினேஷ் குமார் உடன் தகராறில் ஈடுபட்டனர். அப்போது தேவா மற்றும் டேவிட் இருவரும் திடிரென தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை கொண்டு தினேஷ் குமாரை சரமாரியாக குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினர். இதில் வயிறு, கழுத்து உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் அடைந்த தினேஷ்குமார் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து துடிதுடித்து அங்கேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த நபர் காவல் நிலைய போலீசார் தினேஷ் குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்த நிலையில் சுக்கிலநத்தம் நகராட்சி காலணி அருகே மறைந்திருந்த தேவா மற்றும் டேவிட் இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் தினேஷ்குமாருக்கும், தேவா மற்றும் டேவிட் அனைவரும் பெயிண்டிங் வேலை செய்து வருவதாகவும், இதில் தேவா மற்றும் டேவிட் இருவரும் மாமா மருமகன் உறவு முறை என்பதும், தினேஷ்குமார் மற்றும் தேவா, டேவிட் இவர்களுக்கு இடையே முன் விரோதம் இருந்ததாகவும், தினேஷ்குமார் மது போதையில் அடிக்கடி தேவா மற்றும் டேவிட்டிடம் வம்பு இழுத்து வந்ததாகவும், இதை மனதில் வைத்து மதுபோதையில் முன் விரோதம் காரணமாக தினேஷ்குமாரை கொலை செய்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
Next Story

