X
எட்டயபுரத்தில் சேதமடைந்த ரேஷன் கடைக்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என்று அதிமுக நகர செயலாளர் ராஜகுமார் வட்டாட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் வடக்கு ரத வீதியில் அமைந்துள்ள நியாய விலை கடை கட்டிடம் 1981-ம் ஆண்டு கட்டப்பட்ட நிலையில் தற்போது கட்டிடத்தின் சிமெண்ட் பூச்சு பெயர்ந்து, சுவர்கள் பெருமளவில் விரிசல் அடைந்து மிகவும் சேதம் அடைந்து காணப்படுகிறது. தினசரி நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்லும் நிலையில் இக்கட்டிடத்தில் பொதுமக்களுக்கு பாதுகாப்பாற்ற முறையில் தொடர்ந்து ரேசன் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. பொதுமக்களின் நலன் கருதி சேதமடைந்த இக்கட்டிடத்தை இடித்து அகற்றி விட்டு புதிய நியாய விலை கடை கட்டிடம் கட்ட வேண்டும் என்று அதிமுக சார்பில் தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வந்த நிலையில் இன்று எட்டையபுரம் அதிமுக நகர செயலாளர் ராஜகுமார் தலைமையில், முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் உட்பட கட்சியினர் வட்டாட்சியரிடம் மனு அளித்தனர். அதில், "சேதமடைந்த கட்டிடத்திற்கு மாற்றாக உடனடியாக புதிய கட்டிடம் கட்ட வேண்டும். பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாக அங்குள்ள நியாய விலை கடையில் கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும். நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் எட்டையபுரத்தில் அதிமுக சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளனார்.
Next Story