X
தூத்துக்குடி விமான நிலையத்தை வருகிற 26 ஆம் தேதி இரவு பாரத பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க உள்ள நிலையில் விமான நிலையத்தில் ஐந்து அடுக்கு பாதுகாப்பு பணி குறித்து ஆட்சியர் இளம் பகவத் ஆய்வு மேற்கொண்டார்.
தூத்துக்குடி விமான நிலையத்தை வருகிற 26 ஆம் தேதி இரவு பாரத பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க உள்ள நிலையில் விமான நிலையத்தில் ஐந்து அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடு மற்றும் பல்வேறு முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் இளம் பகவத் அதிகாரிகளுடன் ஆய்வு தூத்துக்குடியில் சுமார் 451 கோடி ரூபாய் மதிப்பில் விரிவாக்கம் செய்யப்பட்ட புதிய விமான நிலையத்தை வருகிற ஜூலை 26 ஆம் தேதி இரவு 8 மணி அளவில் நடைபெறும் நிகழ்ச்சியில் பாரத பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் எதற்காக விமான நிலைய வளாகத்தில் சுமார் 10,000 பேர் அமரக்கூடிய வகையில் பிரம்மாண்ட விழா மேடை அமைக்கப்பட்டு வருகிறது இதைத்தொடர்ந்து பிரதமர் வருகையை முன்னிட்டு விமான நிலையம் ஐந்தடுக்கு பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது இதைத் தொடர்ந்து இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் இளம் பகவத் பிரதமர் வருகையை முன்னிட்டு விழா நடக்கும் விழா மேடை அமைக்கும் பணிகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கை விழா முன்னேற்பாடு பணிகள் குறித்து விமான நிலைய அதிகாரிகள் மற்றும் விழா ஏற்பாட்டை கண்காணித்து வரும் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார் இந்த ஆய்வில் விமான நிலைய அதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்
Next Story