X
தூத்துக்குடியில் காணமல் போன அண்ணன் தம்பி இரண்டு பேர் 6-நாட்களுக்கு பிறகு காட்டு பகுதியில் சடலமாக மீட்கப்பட்டதால் பெரும் பரபரப்பு.
தூத்துக்குடி கோயில் பிள்ளைநகர் அருகே உள்ள கீழ பண்டுகரை பகுதியைச் சேர்ந்தவர் சின்னத்துரை இவருக்கு ஆறு குழந்தைகள் இதில் அருள்ராஜ் ஐந்தாவது நபர் அருள்ராஜ் கடந்த சில வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற சாலை விபத்தில் கண் பார்வை இழந்துள்ளார். இதன் காரணமாக திருமணம் ஆகாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு சனிக்கிழமை 26-ஆம் தேதி அன்று நள்ளிரவு அருள்ராஜ் வீட்டு அருகே அமர்ந்து கொண்டு அதே பகுதியை சேர்ந்த சதீஷ், ரிதன், முனீஸ்வரன், வில்வராஜ் மற்றும் காதர் மீரான் பகுதியைச் சேர்ந்த சங்கர் ஆகியோர் கஞ்சா புதைத்துக் கொண்டு தகராறில் ஈடுபட்டு வந்ததுடன் அருள்ராஜ் வீட்டு கதவை தட்டியும் இருந்துள்ளனர் இதை தொடர்ந்து கஞ்சா கும்பலை சேர்ந்தவர்களை அருள்ராஜ் மற்றும் அவரது அக்கா மாரியம்மாள் ஆகியோர் சத்தம் போட்டு தட்டி கேட்டதாக கூறப்படுகிறது. இந்த ஆத்திரத்தில் கஞ்சா கும்பலான சதீஷ்,ரிதன், முனீஸ்வரன், வில்பராஜ், மற்றும் சங்கர் ஆகியோர் அன்று இரவே வீட்டிலிருந்த அருள் ராஜை குண்டுகட்டாக தூக்கிக்கொண்டு பண்டுகரை பகுதிக்கு கொண்டு சென்றாதாக கூறப்படுகின்றது. அங்கே வைத்து அருள் ராஜை அடித்து கொலை செய்தது உடன் அவரது உடலை அங்கே குழி தோண்டி புதைத்துள்ளனர். இந்நிலையில் அருள் ராஜை காணவில்லை என அவரது உறவினர்கள் 6- நாட்களாக தேடி வந்த நிலையில் போலீசார் ரீதன், சங்கர், காதர் மீரான், ஆகிய மூன்று பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அருள் ராஜை கொன்று பண்டுகரை பகுதியில் புகைத்து வைத்ததாக போலீஸ் ஆண்கள் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் நேற்று மாலை பண்டுகரைப் பகுதியில் ஒரு கை தெரிகிறது என அங்கே சென்றவர்கள் கூறினர் இதைத் தொடர்ந்து தெர்மல் நகர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் இன்று காலை அருள் ராஜின் உடலை கஞ்சா கும்பல் கொலை செய்து புதைத்த இடத்திலிருந்து வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில் தோண்டினர் அப்போது மாரி பாண்டி உடல் என்பது தெரியவந்தது இதை தொடர்ந்து அதே இடத்தின் அருகே அவரது சகோதரர் அருள்ராஜ் உடலும் கொன்று புதைக்கப்பட்டது கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். .இரண்டு உடல்களையும் கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பார்வையற்ற நபரான அருள்ராஜ் மற்றும் அவரது சகோதரர் மாரி பாண்டி ஆகியோரை கொலை செய்து குழி தோண்டி புதைத்து விட்டு தப்பி ஓடிய கஞ்சா கும்பலை தெர்மல் நகர் காவல் துறையினர் தேடி வருகின்றனர். தூத்துக்குடி-யில் கஞ்சா போதையில் தகராறு செய்த கும்பல் அண்ணன் தம்பி இருவரையும் அடித்து சென்று காட்டு பகுதிக்கு கொன்று சென்று கொலை செய்து புதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது தங்கள் பகுதியில் நடைபெற்ற கஞ்சா விற்பனை தொடர்பாக பலமுறை புகார்கள் அளித்தும் காவல்துறையினர் கண்டுகொள்ளாததால் இந்த இரண்டு கொலைகள் நடந்துள்ளதாக அந்த பகுதியினர் குற்றசாட்டியுள்ளனர். இந்த நிலையில் போலீசார் இதுகுறித்து கூறும்போது அவர்கள் நண்பர்களான அவர்கள் மது போதையில் ஏற்பட்ட தகராறில் அடித்து கொன்று புதைத்துள்ளதாக தெரிவித்தனர்.
Next Story