தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலினின் நாளை (4-08-25) தூத்துக்குடிக்கு வருகை தருவதை ஒட்டி விமான நிலையத்தில் போலீஸ் பாதுகாப்பு மோப்ப நாய்கள் மூலம் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலினின் நாளை (4-08-25) தூத்துக்குடிக்கு வருகை தருவதை ஒட்டி விமான நிலையத்தில் போலீஸ் பாதுகாப்பு மோப்ப நாய்கள் மூலம் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். தூத்துக்குடியில் புதிய மின்சார கார் நிறுவனத்தை துவங்கி வைப்பதோடு முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக முதலீட்டாளர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ஈடுபடுவதற்காக தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் 4-08-25 காலை 10 மணிக்கு தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்திற்கு தனி விமானத்தில் வருகை தந்து அங்கிருந்து சாலை மார்க்கமாக தூத்துக்குடி சிப்காட் பகுதியில் அமைந்துள்ள வின் பாஸ்ட் நிறுவனத்திற்கு வருகை தந்து அந்த கார் தொழிற்சாலையை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் திறந்து வைத்து முதல் விற்பனையை தொடங்கி வைக்கிறார் இந்த நிகழ்வில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் என அரசுத்துறை அதிகாரிகள் ஏராளமானோர் கலந்து கொள்ள உள்ளனர். தொடர்ந்து அங்கிருந்து சாலை மார்க்கமாக தூத்துக்குடி, திருச்செந்தூர் சாலையில் அமைந்துள்ள மாணிக்க மஹாலில் நடைபெறும் மினி உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார் மேலும் பல்வேறு புதிய தொழில் முதலீட்டுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் இந்த மாநாட்டில் கையெழுத்தாக உள்ளது. இதைத் தொடர்ந்து அங்கிருந்து சாலை மார்க்கமாக தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம் வருகை தரும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் 12 45 மணியளவில் தனி விமானத்தில் சென்னை புறப்பட்டு செல்கிறார். தூத்துக்குடிக்கு ஒரு நாள் சுற்றுப்பயணமாக வருகை தரும் முதல்வருக்கு போலீசார் பலத்த போலீஸ் பாதுகாப்பு போட்டுள்ளனர் அது மட்டுமல்லாமல் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்பனாய் உதவியுடன் தூத்துக்குடி விமான நிலையத்தில் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
Next Story