X
தூத்துக்குடி மாநகராட்சி உட்பட்ட பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது இதில் ஏராளமான பொதுமக்கள் மனுக்களை அளித்தனர் இந்த முகமை தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்து மனு அளித்து அவர்களுக்கு ஆணைகளை வழங்கினார் தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி மாநகராட்சி வார்டுகளுக்கான 1,13,20 ஆகிய வார்டுகளுக்கு உட்பட்ட மக்களுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் போல்பேட்டை பகுதியில் உள்ள தங்கம்மாள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் 1,13,20 வார்டுகளை சேர்ந்த பொதுமக்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட 13 துறைகளை சார்ந்த 43 சேவைகளுக்கு மனுக்களை அளித்தனர் இந்த முகாமில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ‌கலந்து கொண்டு பொது மக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டார். இதைத் தொடர்ந்து மனு அளித்த மக்களுக்கு உடனடி தீர்வாக நலவாரிய உறுப்பினர் அட்டை, மின்சார வாரியம் பெயர் திருத்தம் ஆகிய ஆணைகளை மேயர் ஜெகன் பெரியசாமி வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் வட்டாட்சியர் முருகேஸ்வரி, மாநகராட்சி துணை ஆணையர் சரவணகுமார், உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்
Next Story