கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள கிட்டாம்பாளையம் ஊராட்சி, இரண்டரை ஏக்கர் தரிசு நிலத்தை விவசாய நிலமாக மாற்றி, வெங்காயம், மிளகாய், வெண்டைக்காய் உள்ளிட்ட காய்கறிகளை முப்போகமாக சாகுபடி செய்து, கிராம மக்களுக்கு சந்தை விலையை விட குறைவாக விற்பனை செய்து வருகிறது. முன்னாள் ஊராட்சித் தலைவர் சந்திரசேகர் தொடங்கிய இந்த முயற்சி, தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்ட உதவியுடன் மேற்கொள்ளப்பட்டது. இதுவரை காய்கறி விற்பனையில் ரூ.2 லட்சம் வருவாய் ஊராட்சி கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளது. தற்போது நான்காவது முறையாக வெங்காயம் அறுவடை செய்யப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள தரிசு நிலங்களையும் பயிரிடுவது ஊராட்சியின் இலக்காக உள்ளது. இந்த முயற்சி, மற்ற ஊராட்சிகளுக்கும் முன்னுதாரணமாக அமைந்துள்ளது.
Next Story



