X
தூத்துக்குடி சுதந்திர தின விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்ற அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி காவல்துறையினர் மற்றும் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்பு
நமது நாட்டின் 79 வது சுதந்திர தினம் ஆகஸ்ட் 15ஆம் தேதி நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட விளையாட்டு அரங்கில் வைத்து நடைபெறும் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் இளம் பகவத் கலந்து கொண்டு கொடியேற்றுகிறார் பின்னர் காவல் துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்கிறார் இதைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அரங்கில் தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் கல்லூரி பள்ளி மாணவ மாணவிகளின் தேசிய மாணவர் படை கடற்படை விமானப்படை உள்ளிட்ட மாணவர்கள் பங்கேற்ற அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது ஆயுதப்படை ஆய்வாளர் சுணை முருகன் கண்காணிப்பின் பேரில் நடைபெற்ற இந்த அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் மற்றும் 140க்கும் மேற்பட்ட பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் என சுமார் 250 பேர் பங்கேற்று ஒத்திகையில் ஈடுபட்டனர்
Next Story