
X
தென்காசி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் கனமழையின் காரணமாக, தென்காசி அருகில் உள்ள குற்றால அருவிகளில் நீர் வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக இன்று காலையில் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன் காரணமாக மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு மாவட்டத்திலிருந்து சுற்றுலாப் பயணிகள் குற்றால அருவிகளுக்கு குளிக்க தடை விதித்ததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Next Story

