
X
அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் தலா ரூ 20 லட்சம் மதிப்பில் நான்கு அங்கன்வாடி மைய கட்டிடங்கள் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டிய அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன்; மாணவர்களின் கோரிக்கையை ஏற்று பள்ளி நேரத்தில் பேருந்து வசதி ஏற்படுத்தி தந்த அமைச்சருக்கு நன்றி தெரிவித்த மாணவர்கள் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் கோவிலாங்குளம் கிராமத்தில் மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை தினத்தில் ரூ 8.5 லட்சம் மதிப்பில் புதிதாக உயர் கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின் விளக்கை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் மின்விளக்கு பொத்தானை ஆன் செய்து மின் விளக்கை பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். அதனைத் தொடர்ந்து கோவிலாங்குளம் கிராமத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமை துவக்கி வைத்து பார்வையிட்டார் மேலும் பொது மக்களின் கோரிக்கை மனுக்களையும் பெற்றுக்கொண்டார். அதனை தொடர்ந்து ஆமணக்குநத்தம் கிராமத்தில் ரூ 20 லட்சம் மதிப்பில் புதிதாக அங்கன்வாடி மையம் கட்டிடம் கட்டுவதற்கும் அமைச்சர் அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார். அப்போது ஆமணக்கு நத்தம் கிராமத்தில் இருந்து சிதம்பராபுரம் செல்லும் வழியில் உள்ள குருந்தமடம் அரசு உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் பள்ளி மாணவ மாணவியர்கள் ஏற்கனவே அமைச்சரிடம் மாலை நேரத்தில் பள்ளிக்கு பேருந்து வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர் அதை உடனடியாக அமைச்சர் செய்து தந்த நிலையில் பள்ளி வழியாக சென்ற அமைச்சருக்கு பள்ளி மாணவ மாணவியர்கள் தங்களுக்கு பேருந்து வசதி ஏற்படுத்தி தந்ததற்காக நன்றி தெரிவித்தனர். மேலும் அதே நேரத்தில் காலையில் வரும் பேருந்து சரியான நேரத்திற்கு வரவேண்டும் எனவும் அவர்கள் அமைச்சரிடம் கோரிக்கை கொடுத்தனர். அதையும் செய்து தருவதாக அமைச்சர் உறுதி அளித்ததால் அமைச்சருக்கு மாணவ மாணவிகள் நன்றி தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து சிதம்பராபுரம், சின்ன செட்டி குறிச்சி, செட்டி பட்டி ஆகிய பகுதிகளில் தலா ரூபாய் 20 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி மையங்கள் கட்டுவதற்கும் அமைச்சர் அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார். மேலும் பணிகளை தரமாக முடிக்குமாறு அதிகாரிகளை அறிவுறுத்தினார். இந்த நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Next Story

