
X
தூத்துக்குடி முத்தையாபுரம் பொட்டுக்காடு மேல தெருவில் வசிப்பவர் சந்திரன் (55). இவர் தூத்துக்குடி ராமேஸ்வரம் கிழக்கு கடற்கரை சாலை ரோட்டில் உள்ள வெள்ளப்பட்டி அருகில் பாலம் கட்டும் குடோனில் வாட்ச்மேனாக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு கட்டையால் கொடூரமாக தாக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தருவைகுளம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று இவரது பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி முத்தரையர் தெருவை சேர்ந்த மதுரை வீரன் (44) என்பவர் இவரை கம்பால் தாக்கி கொலை செய்தது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தியதில் இருவரும் ஒரே பெண்ணை கள்ள காதலியாக வைத்திருந்ததால் அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் மாரியப்பனுக்கு மது வாங்கி கொடுத்து கட்டையால் தாக்கி மதுரை வீரன் கொலை செய்ததாக போலீசாரிடம் தெரிவித்தார். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் செய்து காவலில் வைக்கப்பட்டார்.
Next Story

