
X
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பத்மா என்ற பெண்ணுக்கு குழந்தை பிறந்த நிலையில் திடீரென இறந்து விட்டதாக கூறிய சம்பவத்தால் பரபரப்பு உரிய முறையில் சிகிச்சை அளிக்காதே குழந்தை இறப்பிற்கு காரணம் சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் செவிலியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை
தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் குச்சிக்காடு பகுதியைச் சேர்ந்தவர் குட்டி ராஜா இவருக்கும் பத்மா என்பவருக்கும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது குட்டி ராஜா திருச்செந்தூர் பகுதியில் டீக்கடை வைத்து தொழில் செய்து வருகிறார் இந்நிலையில் கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பு பத்மா கர்ப்பமடைந்துள்ளார் இதை தொடர்ந்து ஆத்தூர் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கப்படும் தொடர் மருத்துவ சிகிச்சை பெற்று வந்துள்ளார் இந்த நிலையில் நேற்று முன்தினம் கடந்த 22ஆம் தேதி காலை 10 மணி அளவில் பத்மாவிற்கு பிரசவ வலி வந்துள்ளது இதைத் தொடர்ந்து கணவர் குட்டி ராஜா மற்றும் உறவினர்கள் பத்மாவை ஆறுமுகநேரி பகுதியில் அமைந்துள்ள ஜெயரத்தினம் என்ற சுந்தரம் நல்லதம்பி மகப்பேறு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர் பத்மாவிற்கு ஏழு மாதத்திலேயே பிரசவ வலி வந்ததால் தங்களிடம் உரிய சிகிச்சை அளிக்க முடியாது என தனியார் மருத்துவமனை மேல் சிகிச்சைக்காக பத்மாவை தங்களது ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கடந்த 22ஆம் தேதி பிற்பகல் 3:10 மணி அளவில் அனுப்பி வைத்தது இதைத்தொடர்ந்து பத்மா தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கர்ப்பிணி பெண்களுக்கான மகப்பேறு பிரிவில் சேர்க்கப்பட்டு பிரசவ சிகிச்சை நடைபெற்று ஆண் குழந்தை பிறந்துள்ளது இதைத்தொடர்ந்து குழந்தையை பத்மாவிடம் காண்பித்த அரசு மருத்துவமனை செவிலியர்கள் குழந்தை குறைந்த மாசத்தில் பிறந்துள்ளதால் இங்குபேட்டரில் வைக்க வேண்டும் எனக் கூறி வாங்கிச் சென்று வைத்துள்ளனர் பிரசவார்டில் பத்மாவிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது இந்நிலையில் இரவு 9 மணி அளவில் குழந்தை இறந்த நிலையில் பிறந்ததாக கூறி பத்மாவின் கணவர் குட்டி ராஜாவிடம் தகவல் தெரிவித்த மருத்துவர்கள் குழந்தை உடலை பெற்றுக் கொள்ளும் படி கூறியுள்ளனர் இதைத்தொடர்ந்து குட்டி ராஜா தனது ஆண் குழந்தையின் உடலை பெற்று அடக்கம் செய்துள்ளார் இந்நிலையில் சிகிச்சையில் இருந்த மனைவி பத்மாவை தொடர்பு கொள்ள மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனையில் வேலை பார்க்க செவிலியர்கள் அனுமதி மறுத்து வந்த நிலையில் நேற்று காலை பத்மா ஸ்கேன் எடுப்பதற்காக வெளியே வந்த போது கணவர் குட்டி ராஜா குழந்தை இறந்த விஷயம் குறித்து மனைவியிடம் கூறியுள்ளார் இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பத்மா தன்னிடம் குழந்தை நன்றாக இருப்பதாக கூறி செவிலியர்கள் குழந்தையை காட்டி விட்டு தான் சென்றனர் அப்போது குழந்தை உயிருடன்தான் இருந்தது நார்மல் டெலிவரி ஆக குழந்தை பிறந்தது துடிப்பு எல்லாம் நன்றாக இருந்தது ஆனால் பின்னர் உரிய சிகிச்சை அளிக்காமல் குழந்தை இறந்து விட்டதாக தனது கணவரிடம் தெரிவித்துள்ளார் இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட கணவன் மனைவி இருவரும் குழந்தை இறப்பிற்கு காரணமான மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்தனர் இதுகுறித்து குட்டி ராஜா கூறுகையில் எனது மனைவிக்கு அளிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சை குறித்து எந்தவித தகவலும் தெரிவிக்கவில்லை குழந்தை பிறந்த விஷயம் தந்தையான தன்னிடம் தெரிவிக்காமல் மறுத்துவிட்டு ஆனால் குழந்தை உயிருடன் பிறந்த குழந்தையை பிறக்கும்போதே இறந்து விட்டதாக ஏமாற்றி கூறியுள்ளனர் இதற்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் கவனக் குறைவு காரணமாகவே குழந்தை பிறந்துள்ளது எனவே இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க தென்பாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளேன் இதில் தொடர்புடைய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மீது மருத்துவமனை நிர்வாகம் சுகாதாரத்துறை பணி நீக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென தெரிவித்தார்
Next Story

