X
முகமூடி அணிந்து சொகுசுக்காரில் வந்து அரசுப்பள்ளி ஆசிரியையிடம் கொள்ளையடித்த 3 நபர்கள்;திரைப்பட பாணியில் 24 மணி நேரத்தில் தட்டித்தூக்கிய போலிசார்;பயங்கர ஆயுதங்கள், தங்கநகை மற்றும் பணம் பறிமுதல்*
விருதுநகர் அருகே முகமூடி அணிந்து சொகுசுக்காரில் வந்து அரசுப்பள்ளி ஆசிரியையிடம் கொள்ளையடித்த 3 நபர்கள்;திரைப்பட பாணியில் 24 மணி நேரத்தில் தட்டித்தூக்கிய போலிசார்;பயங்கர ஆயுதங்கள், தங்கநகை மற்றும் பணம் பறிமுதல் விருதுநகர் வ.உசி தெருவை சேர்ந்தவர் சம்பத்குமார் மனைவி நாகராணி(48) ஓ.சங்கரலிங்காபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.இவர் வழக்கம்போல் நேற்று பைக்கில் பள்ளிக்குச் சென்றார்.இனாம்ரெட்டியபட்டி - ஓ. சங்கரலிங்காபுரம் சாலையில் தனியார் பட்டாசு ஆலை அருகே சென்ற போது காரில் வந்த 3 மர்ம நபர்கள் மும்மூடி அணிந்த படி, நாகராணி கழுத்தில் அணிந்திருந்த தங்க தாலியுடன் கூடிய 6 சவரன் தங்க செயின் மற்றும் 2 செல்போன், ரூ.1,500 பணத்துடன் கைப்பையையும் பறித்து சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் ஆமத்தூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட நபர்களை தேடி வந்தனர். இந்நிலையில் இதே வழிப்பறி செய்த கும்பல் காரில் குமரி-நெல்லை சென்று விட்டு மதுரை கப்பலூர் சுங்கச்சாவடி வழியாக தப்பிச் செல்வதாக விருதுநகர் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. விருதுநகர் டிஎஸ்பி யோகேஷ் குமார் தலைமையிலான போலீஸார் காரில் தப்பிக்க முயன்ற வழிப்பறி செய்த 3 பேர் கொண்ட கும்பலை திரைப்பட பாணியில விரட்டிச்சென்று மடக்கிப்பிடித்தனர்.போலீசாரின் விசாரணையில் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் நெல்லை சுரேஷ் ,சேலம் அஜித் குமார் மற்றும் திருச்சி பால்குமார் என்பது தெரியவந்ததாகவும் சிறையில் இந்த மூவருக்கும் பழக்கம் ஏற்பட்டு தமிழகம் முழுக்க பல்வேறு கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததும் இவர்கள் மீது பல்வேறு கொள்ளை வழக்குகள் உள்ளதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.மேலும் இவர்கள் காரை சோதனை செய்ததில் அரிவாள்,கத்தி,சிறிய வகையிலான கடப்பாரை போன்ற பயங்கர ஆயுதங்களுடன் சுமார் ஆறு சவரன் தங்க நகை மற்றும் 20 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றையும் போலிசார் பறிமுதல் செய்தனர்.விசாரணைக்கு பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Next Story