
X
சுதந்திரப் போராட்டத் தியாகி திரு. இம்மானுவேல் சேகரன் அவர்களின் 68-ஆவது நினைவு நாளையொட்டி அவரது நினைவிடத்தில் அதிமுக சார்பில் நினைவு அஞ்சலி செலுத்துதல் ! தனது இளம் வயதிலேயே பிரிட்டிஷ் அரசுக்கு எதிராகப் போராடியவரும், இந்திய சுதந்திரத்திற்காகக் குரல் கொடுத்தவரும், இந்திய ராணுவத்தில் பணியாற்றியவரும், 'வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தில் பங்கேற்று சிறை சென்றவருமான சுதந்திரப் போராட்டத் தியாகி திரு. இம்மானுவேல் சேகரன் அவர்களின் 68-ஆவது நினைவு நாளான 11.9.2025 வியாழக் கிழமை காலை 10 மணியளவில், ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், முன்னாள் அமைச்சர் உதயகுமார், கழக அமைப்புச் செயலாளர்கள் என் சின்னத்துரை, மருத்துவ அணி செயலாளர் மணிகண்டன் கழக மகளிர் அணி துணை செயலாளர் ராஜலட்சுமி மற்றும் கழக நிர்வாகிகள் இமானுவேல் சேகரத்திற்கு அஞ்சலி செலுத்துவார்கள் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்
Next Story

