
X
தூத்துக்குடியில் உலக பிசியோதெரபி தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஸ்கேட்டிங் நிகழ்ச்சி 100க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்பு உலக பிசியோதெரபி தினம் இன்று கொண்டாடப்படுகிறது இதையொட்டி தூத்துக்குடி மாவட்ட இந்திய பிசியோதெரபி அமைப்பு சார்பில் பொதுமக்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி தூத்துக்குடியில் உள்ள முத்துநகர் கடற்கரை பூங்காவில் அமைந்துள்ள ஸ்கேட்டிங் மைதானத்தில் நடைபெற்றது உடல் ஆரோக்கியத்தையும் உடல் வலிமையும் எந்தவிதமான நோய்களுமின்றி வாழ வேண்டும் என்ற விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் வகையில் இடைவிடாது 15 நிமிடங்கள் ஸ்கேட்டிங்கில் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் கலந்து கொண்டு 15 நிமிடங்கள் இடைவிடாது இந்த மைதானத்தை சுற்றி வந்தனர் இதைத்தொடர்ந்து இதில் கலந்துகொண்ட மாணவ மாணவியருக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் தூத்துக்குடி மாவட்ட இந்திய பிசியோதெரபி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முகமது நசீர் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினார் இந்த நிகழ்ச்சியில் பிசியோதெரபி மருத்துவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Next Story

