
X
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தொழிலாளர் நலத்துறை சார்பில் மீட்கப்பட்ட குழந்தை மற்றும் வளரிளம் பருவத் தொழிலாளர்களுக்கு அரசு நிவாரணத் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.குழந்தை மற்றும் வளரிளம் பருவத் தொழிலாளர் தடுத்தல் மற்றும் முறைப்படுத்துதல் சட்டத்தின் கீழ், மீட்கப்பட்ட இரண்டு குழந்தைத் தொழிலாளர்களுக்கு அரசு நிவாரணத்தொகையாக தலா ரூ.35,000 வீதம் மொத்தம் ரூ.70 ஆயிரம் உதவித்தொகை சான்று வழங்கப்பட்டது. அப்போது, கலெக்டர் பிரசாந்த் கூறுகையில்; வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து பணிகளிலும் குழந்தை மற்றும் வளரிளம் பருவத் தொழிலாளர்களை பணியில் அமர்த்துவது தடை செய்யப்பட்டுள்ளது. எனவே, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 18 வயது பூர்த்தியடையாத குழந்தை மற்றும் வளரிளம் பருவத் தொழிலாளர்களை கடை, உணவு போன்ற பல்வேறு வணிக நிறுவனங்களில் பணிக்கு அமர்த்தும் நிறுவன உரிமையாளர்களுக்கு சட்டப்படி சிறை தண்டனையுடன் கூடிய அபராதம் விதிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார். நிகழ்ச்சியில், மாவட்ட தொழிலாளர் உதவி ஆய்வாளர் நந்தினி பங்கேற்றார்.
Next Story

