X
தூத்துக்குடியில் கல்விக் கடன் முகாம் நடைபெற உள்ளதாக ஆட்சியர் இளம் பகவத் தகவல்
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்ததாவது: உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவியர்களுக்கான கல்விக் கடன் வழங்கும் முகாம் வரும் 29.09.2025 காலை 10 மணி முதல் தூத்துக்குடி வ.உ.சி. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெறுகிறது. புதிதாக இன்ஜினியரிங், மருத்துவம், வேளாண்மை உள்ளிட்ட பாடங்களில் சேரும் மாணவர்களும், ஏற்கனவே கல்லூரியில் படிக்கும் மாணவர்களும் பங்கேற்கலாம். தேவையான கல்வி சான்றிதழ்கள், பான்/ஆதார் அட்டை, வங்கி பாஸ் புக், புகைப்படம், கட்டண விவரங்கள் உள்ளிட்ட ஆவணங்களுடன் வருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. பெற்றோர் இணை விண்ணப்பதாரராக தேவையான ஆவணங்களையும் கொண்டு வர வேண்டும். மத்திய/மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்கள் கட்டணங்களுக்கான நிதியை இந்தக் கடன் மூலம் பெறலாம். மாணவர்கள் https://pmvidyalaxmi.co.in/ தளத்திலும் பதிவுசெய்யலாம் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Next Story