
X
புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாகும் இந்த புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமை மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும் புரட்டாசி சனிக்கிழமைகளில் வைணவ ஆலயங்களில் பெருமாளுக்கு சிறப்பு பூஜை மற்றும் அலங்காரம் நடைபெறும் புரட்டாசி மாத இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு தூத்துக்குடியில் உள்ள பழமையான வைகுண்டபதி பெருமாள் கோவிலில் இன்று அதிகாலை 4.30 மணி அளவில் நடை திறக்கப்பட்டு கோபூஜையும் பின்னர் விஸ்வரூப தரிசனமும் பின்னர் குருவாயூரப்பன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்த பெருமாளுக்கு சிறப்பு பூஜை மற்றும் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது இதேபோன்று சீனிவாச பெருமாள் அலங்காரத்திலும் பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளித்தார் சீனிவாச பெருமாள் மற்றும் அனுமனுக்கு ஏராளமான பக்தர்கள் துளசி மற்றும் வெற்றிலை மாலை சாத்தி வழிபட்டனர் இதையொட்டி அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வைகுண்டபதி பெருமாள் ஆலயத்தில் நீண்ட வரிசையில் நின்றபடி தரிசனம் செய்து வருகின்றனர் பக்தர்களுக்கு பால் பாயாசம் அரவணை உள்ளிட்டவை பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது இதையொட்டி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது
Next Story

