தூத்துக்குடி மாநகராட்சி 39 வது வார்டு பகுதியில் கழிவுநீர் ஓடையில் தேங்கி துர்நாற்றம் வீசுவதை தொடர்ந்து மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு மேற்கொண்டு உடனடியாக அப்புறப்படுத்த உத்தரவு
தூத்துக்குடி மாநகராட்சி 39 வது வார்டு பகுதியில் கழிவுநீர் ஓடையில் தேங்கி துர்நாற்றம் வீசுவதை தொடர்ந்து மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு மேற்கொண்டு உடனடியாக அப்புறப்படுத்த உத்தரவு தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட 39 வது வார்டு பகுதியில் கழிவுநீர் பகுதியில் பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவு பொருட்கள் தேங்கி அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேக்கம் ஏற்பட்டு துர்நாற்றம் வீசியது. இதைத் தொடர்ந்து பொதுமக்கள் வார்டு மாமன்ற உறுப்பினரும் மாநகராட்சி சுகாதாரக் குழு தலைவருமான சுரேஷ்குமாரிடம் புகார் தெரிவித்தனர் இதைத் தொடர்ந்து அவர் மேயர் ஜெகன் பெரியசாமியிடம் தங்கள் வார்டு பகுதியில் உள்ள கழிவுநீர் ஓடையில் உள்ள குப்பைகள் அகற்றி மழைக்காலத்திற்கு முன்பு நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்தார். இதை தொடர்ந்து தூத்துக்குடி சிவன் கோவில் தெரு, காசு கடை பஜார், சுற்றுலா மாளிகை, மற்றும் பழைய மாநகராட்சி உள்ளிட்ட பகுதிகளில் நேரடியாக வருகை தந்த மேயர் ஜெகன் பெரியசாமி அந்தப் பகுதியில் உள்ள கழிவுநீர் ஓடையை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடனடியாக கழிவுநீர் ஓடையில் உள்ள பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் தேங்கியுள்ள கழிவு பொருட்களை அகற்ற உத்தரவிட்டு உடனடியாக தூய்மை பணியாளர்கள் அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதி மக்கள் மேயர் ஜெகன் பெரியசாமிக்கு நன்றி தெரிவித்தனர். இந்த ஆய்வின்போது சுகாதாரக் குழு தலைவர் எஸ் சுரேஷ்குமார் மேயர் நேர்முக உதவியாளர் ரமேஷ் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் ஆகியோர் உடன் இருந்தனர்
Next Story