
X
குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் ஆலய தசரா திருவிழா மற்றும் நவராத்திரி திருவிழா காரணமாக கடந்த 10 நாட்களாக ஏராளமான பொதுமக்கள் மாலை அணிந்து விரதம் இருந்து வந்தனர் இந்நிலையில் தசரா திருவிழா முடிவுற்றதை தொடர்ந்து அசைவ உணவு சாப்பிடுவதற்காக மீன்களை வாங்க திரேஸ்புரம் நாட்டு படகு மீன்பிடி துறைமுகத்திற்கு ஏராளமான பொதுமக்கள் வந்திருந்தனர். இந்நிலையில் இன்று சனிக்கிழமை என்பதால் ஆழ்கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற நாட்டுப் படகுகள் கரை திரும்பின மீன்களின் வரத்து குறைவாக காணப்பட்ட நிலையில் மீன்களை வாங்க பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது இதன் காரணமாக மீன்களின் விலை உயர்ந்து காணப்பட்டது. சீலா மீன் ஒரு கிலோ 1100 ரூபாய் வரையும் விளை மீன், ஊழி ,பாறை ஆகிய ரகமீன்கள் கிலோ500 ரூபாய் முதல் 600 ரூபாய் வரையும் சூப்பர் நண்டு ஒரு கிலோ 700 ரூபாய் வரையும் நெத்திலி ஒரு கூடை 3000 ரூபாய் வரையும் முண்டக்கண்ணி பாறை ஒரு கூடை ஆயிரம் ரூபாய் வரையும் விற்பனையானது இரண்டு வாரங்களுக்கு பின்பு மீன்களுக்கு நல்ல விலை கிடைத்ததால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Next Story

