X
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவை முன்னிட்டு 4 கோடியே 57 லட்சம் ரூபாய் உண்டியல் வருவாய் கிடைத்துள்ளது.
திருச்செந்தூர் அருகே உள்ள குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கடந்த மாதம் தொடங்கி 2 ஆம் தேதி சூரசம்ஹார விழாவுடன் நிறைவடைந்தது. இந்த விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். தசரா திருவிழா நடந்து முடிந்த நிலையில், கோயிலில் உள்ள 18 நிரந்தர உண்டியல்கள் மற்றும் 63 தசரா திருவிழா தற்காலிக உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி நடந்தது. இதில் உண்டியல் வருவாயாக 4 கோடியே 57 லட்சத்து 23 ஆயிரத்து 30 ரூபாய் வருவாய் கிடைத்தது. மேலும் 115 கிராம் தங்கமும், 2689.900 கிராம் வெள்ளி காணிக்கையாக கிடைத்துள்ளது. இது தவிர 15 வெளிநாட்டு கரன்சிகள் கிடைத்துள்ளது. கடந்த வருடம் 4 கோடியே 11 லட்சத்து 21 ஆயிரத்து 516 ரூபாய் உண்டியல் வருவாய் கிடைத்தது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதலாக வருவாய் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story