X
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே அமைந்துள்ள காலங்கரை கிராமத்தில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு மேலும் தூத்துக்குடி மாநகரின் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது
தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் மற்றும் மாவட்டம் முழுவதும் செய்து வரும் பலத்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கத்தை துவங்கி உள்ளது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே அமைந்துள்ள காலங்கரை கிராமத்தில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு மேலும் தூத்துக்குடி மாநகரின் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது தூத்துக்குடி மாவட்டம் மற்றும் மாநகர பகுதிகளில் நாளை 17ஆம் தேதி வரை கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலாட் கொடுத்து எச்சரிக்கை விடுத்துள்ளது இதன் காரணமாக தூத்துக்குடி மாநகரப் பகுதி மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது பலத்த மழை பெய்து வருவதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்காய் துவங்கி உள்ளது தூத்துக்குடி மாநகரில் பழைய மாநகராட்சி அலுவலகப் பகுதி மற்றும் அந்தோனியார் கோவில் தெரு எஸ் எஸ் பிள்ளை தெரு ஒன்னாம் கேட் காந்தி சிலை பகுதி மற்றும் தமிழ் சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி குளம் போல் காணப்படுகிறது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள காலங்கரை கிராமத்தில் நேற்று இரவு முதல் பெய்த பலத்த மழை காரணமாக வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் உடனடியாக மாவட்ட நிர்வாகம் மழை நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் இதேபோன்று தூத்துக்குடி ஒன்னாம் கேட் பகுதியில் அமைந்துள்ள பேட்டரி சர்ச் தேவாலயத்திற்குள் தண்ணீர் புகுந்துள்ளது இதன் காரணமாக தேவாலயத்தில் வழிபாடு நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது இதை தொடர்ந்து மழை நீரை வெளியேற்ற கோவில் நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது
Next Story