
X
தூத்துக்குடி புதுக்கோட்டையில் “நலம் காக்கும் ஸ்டாலின்” சிறப்பு மருத்துவ முகாம் – அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் பார்வை தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை TDTA P.S. பெரியநாயகம் மேல்நிலைப்பள்ளியில் இன்று (18.10.2025) நடைபெற்ற “நலம் காக்கும் ஸ்டாலின்” சிறப்பு மருத்துவ முகாமில் மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் அவர்கள் மருத்துவ பரிசோதனை அரங்குகளை பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் க. இளம்பகவத், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா, சுகாதார அலுவலர் (தூத்துக்குடி) யாழினி, வருவாய் கோட்டாட்சியர் பிரபு உள்ளிட்ட அரசு மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story

