
X
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். நாளைய தினம் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா தொடங்க உள்ளது. இதற்கிடையில் இன்றைய தினம் கவிஞரும் பாடலாசிரியருமான சினேகன் தனது மனைவி கன்னிகா ரவி இரண்டு மகள்களுடன் முருகனை தரிசனம் செய்ய வருகை தந்தார். கோவிலுக்குள் வந்த அவர்கள் முருகன், சண்முகர், வள்ளி, தெய்வானை, சத்ரு சம்ஹார மூர்த்தி, பெருமாள், தட்சிணாமூர்த்தி, உள்ளிட்ட அனைத்து சன்னதிகளிலும் தரிசனம் செய்தனர். கோவிலுக்கு வந்த சினேகன் குடும்பத்திற்கு கோவில் பிரசாதமான இலை விபூதி வழங்கப்பட்டது. தொடர்ந்து வெளியே வந்த சினேகனுடன் கோயிலுக்கு வருகை தந்த பக்தர்கள் புகைப்படம் மற்றும் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் சினேகன் கூறுகையில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று குடும்பத்துடன் தரிசனம் செய்தேன். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நாளை நடைபெற உள்ள கந்தசஷ்டி விழாவிற்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. முதல்முறையாக மகள்களுடன் கோயிலுக்கு வந்தது திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு தான். சென்னையில் மழை வெள்ள பிரச்சனைகளை சரி செய்வதற்கு 90% பணியில் நிறைவடைந்துள்ளது. ஒரு சில இடங்களில் உள்ள பணிகளை விரைந்து முடிப்பதற்கான பணிகள் நடந்து வருகிறது. ஆலயத்தில் அனைவரும் தரிசனம் செய்பவர் செய்ய வருவது ஆத்ம திருப்திக்காக தான். அனைவரும் இணக்கமாக இருந்து அனைத்தையும் கடந்து செல்வது தான் மானிடத்தில் பண்பாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். சிறிய சிறிய விஷயங்களை கடந்து செல்வது கற்றுக் கொள்ள வேண்டும். வருகின்ற தேர்தல் குறித்து கேட்டதற்கு உங்களுக்கும் எனக்கும் தெரிய வாய்ப்பில்லை. ஆனால் மற்ற தேர்தல்களை விட இந்த வருகின்ற நடைபெற உள்ள தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். பெரும் யுத்தத்தை அனைத்து கட்சிகளும் சந்திக்க வேண்டிய நிலை வரும் என்று தெரிவித்தார்.
Next Story

