NIA- எனப்படும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் ஆய்வு...

NIA- எனப்படும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் ஆய்வு...
X
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் பக்ருதீன் என்பர் வீட்டில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை முக்கிய ஆவணங்களை கைப்பற்றி விசாரணைக்கு அழைத்து சென்றனர்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் ஆசாத் தெருவில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் மன்னை பாபா பக்ருதீன் என்பவர் வீட்டில் தொடர்ந்து சோதனைகளில் ஈடுபட்டு வந்தனர். மன்னை பாபா பக்ருதீன் பல்வேறு தீவிரவாத அமைப்புகளில் தொடர்பு இருப்பதாகவும் தடை செய்யப்பட்ட பல்வேறு இயக்கங்களில் இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் மதங்கள் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவிட்டு பரப்புரை செய்வதாக கூறி பாபா பக்ருதீன் என்பவர் வீட்டில் இன்று காலை முதலே சோதனையானது நடைபெற்று வந்தது . இந்த சோதனை குறிப்பாக 5 மணி நேரத்திற்கு மேலாக அவர் வீட்டில் நடைபெற்று வந்தது . ஏற்கனவே அவரது வீட்டில் 16.09.2021ல் NIA சோதனையானது நடைபெற்றது. இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் அவரது வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டு NIA அதிகாரிகள் கொண்டு சென்றனர். இன்று அதே போல அதிகாலை முதலே NIA அதிகாரிகள் சோதனை நடத்தி பென்டிரைவ் , வங்கி கணக்கு புத்தகங்கள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை கைப்பற்றப்பட்டு பாவா பக்ருதினை NIA அதிகாரிகள் விசாரணைக்கு சென்னைக்கு அழைத்து சென்றனர் . இந்த சோதனையானது மன்னார்குடியில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
Next Story