திருப்பூரில் நிட்ஜோன் பின்னலாடை இயந்திர கண்காட்சி இன்று தொடக்கம்

திருப்பூரில் நிட்ஜோன் பின்னலாடை இயந்திர கண்காட்சி இன்று தொடக்கம்

கண்காட்சி தொடக்கம்

திருப்பூர் பின்னலாடை இயந்திர கண்காட்சி இன்று தொடங்கியது.

திருப்பூர் பின்னலாடை இயந்திர கண்காட்சி இன்று துவங்கியது. செயற்கை நுண்ணறிவுத் திறன் கொண்ட அதிநவீன இயந்திரங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. திருப்பூர் பின்னலாடை துறைக்கு அதிக அளவில் ஆர்டர்கள் கிடைக்கப் பெற்றுள்ள நிலையில்,

போட்டி நாடுகளுக்கு ஈடு கொடுத்து நவீன முறையில் உற்பத்தியை பெருக்க பின்னலாடை நிறுவனங்கள் முனைப்பு காட்டி வருகின்றன. புதிய இயந்திரங்களை வாங்கவும் தொழில் துறையினர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதனை முன்னிட்டு திருப்பூரில் நிட் ஜோன் எக்ஸ்போ எனப்படும் பின்னலாடை இயந்திர கண்காட்சி இன்று துவங்கியது. மூன்று நாட்கள் நடைபெறும் இக்கண்காட்சியை ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கழக தலைவர் சக்திவேல் துவக்கி வைத்தார்.

200 அரங்குகள் கொண்ட கண்காட்சியில் சென்னை கோவை பெங்களூர் மும்பை உள்ளிட்ட பல்வேறு நகரங்களை சேர்ந்த நிறுவனங்கள் அதிநவீன இயந்திரங்களை காட்சிப்படுத்தினர். இதில் பிரதானமாக நவீன பிரின்டிங் இயந்திரங்கள் செயற்கை நுண்ணறிவுத் திறன் கொண்ட தையல் இயந்திரங்கள் புதிதாக கொண்டு வரப்பட்டுள்ளது. இத்தகைய நவீன இயந்திரங்கள் மூலமாக குறைவான ஆட்களை பயன்படுத்தி அதிக அளவிலான உற்பத்தியை பெற முடியும் எனவும் ஆட்கள் பற்றாக்குறை உள்ள நிலையில்,

இது போன்ற இயந்திரங்கள் மூலம் பணியை எளிதாக்கி கொள்ள முடியும் என தொழில் துறையினர் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

Tags

Next Story