வாசுதேவநல்லூரில் மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம்

X
நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் மகாத்மா காந்திஜி சேவா சங்கத்தின் கீழ் இயங்கும் பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மனவளர்ச்சி குன்றியோர் சிறப்புப் பள்ளியில் மழைக்கால நோய்த்தொற்று தடுப்பு அலுவலர் (நெல்லை மற்றும் தென்காசி) டாக்டர் உஷா அறிவுறுத்தலின்படி மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கும் விழா நடைபெற்றது. வாசுதேவநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய சித்தா மருத்துவர் ஆரோக்கியராஜ் விழாவிற்கு தலைமை தாங்கி மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கினார். பள்ளியின் தாளாளர் தவமணி, தலைமை ஆசிரியர் சங்கரசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு ஆசிரியர்கள் சாந்தி, ஹெலன் இவாஞ்சிலின், இயன்முறை மருத்துவர் புனிதா, உதவி ஆசிரியர் பூமாரி, கவிதா ஆகியோர் கலந்து கொண்டனர்.
Tags
Next Story
