தென்காசியில் நிலவேம்பு குடிநீா் வழங்கும் முகாம்

X
தென்காசியில் நிலவேம்பு குடிநீா் வழங்கும் முகாம்
தென்காசி சித்த மருத்துவ பிரிவு மற்றும் தென்காசி ஜாக் ஜமாஅத் மனித நேய குழு சார்ப்பில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
தென்காசி பகுதியில் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதையடுத்து, பொதுமக்களுக்கு இலவசமாக நிலவேம்பு குடிநீா் வழங்கும் முகாம் நடைபெற்றது. தென்காசி சித்த மருத்துவ பிரிவு மற்றும் தென்காசி ஜாக் ஜமாஅத் மனித நேய குழு சாா்பில் நடைபெற்ற இம்முகாம், காட்டுபாவா பள்ளிக்கூடம் அருகே நடைபெற்றது. தென்காசி சித்த மருத்துவா் செல்வகணேசன் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீா் வழங்கி தொடங்கி வைத்தாா். ஜாக் ஜமாஅத் மாவட்ட தலைவா் உஸ்மான் ஃபிா்தௌசி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இதில் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
Next Story
