நீலகிரி தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் அறிவிப்பு!

நீலகிரி தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் அறிவிப்பு!

நீலகிரி நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க., வேட்பாளராக லோகேஷ் தமிழ் செல்வன் அறிவிக்கப்பட்டுள்ளார்.


நீலகிரி நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க., வேட்பாளராக லோகேஷ் தமிழ் செல்வன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

அவிநாசி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தனபால்‌, (முன்னாள் சபாநாயகர்) கலைச்செல்வி ஆகியோரின் மகன் த.லோகேஷ் தமிழ்செல்வன் 40, இவருக்கு முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., இப்பெயரை சூட்டியுள்ளார். சேலத்தில் பிறந்த இவர் பி.காம்., எம்.பி.ஏ., பட்டம் பெற்றுள்ளார். முன்னாள் அ.தி.மு.க., ஐ.டி., விங் அவிநாசி தொகுதி பொருப்பாளராக இருந்துள்ளார்.

சொந்தமாக ஐ.டி., நிறுவனம் நடத்திவருகிறார். இவரது திருமணம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் நடந்துள்ளது. மாமனார் நாமக்கல் அருணாசலம் எம்.ஜி.ஆர்., ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்துள்ளார். மனைவி தங்கபூர்ணிமா, மகன்கள் நிகேஷ் தமிழ்செல்வன், பத்மேஷ் தமிழ்செல்வன்.

Tags

Next Story