பைக்காரா படகு இல்லம் வரும் 30ம் தேதி வரை செயல்படாது

பைக்காரா படகு இல்லம்  வரும் 30ம் தேதி வரை செயல்படாது
பைக்காரா அணை செல்லும் சாலை, பராமரிப்பு பணி காரணமாக, 2 வாரத்திற்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்து மாவட்ட வன அலுவலர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

நீலகிரி மாவட்டத்திற்கு கடந்த ஏப்ரல், மே மாதங்களில் மட்டும் சுமார் 8.5 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்து சென்றுள்ளனர். ஊட்டி நகர் பகுதியை சுற்றிப் பார்க்கும் சுற்றுலா பயணிகள், கூடலூர் சாலையில் உள்ள பைக்காரா அணைக்கு செல்கின்றனர்.

ஊட்டி - கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பைக்கரா படகு இல்லம் செல்லும் சாலை வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த சாலை குண்டும் குழியுமாக இருப்பதால், 2கி.மீ., தூரத்தை கடக்க சுமார் 30 நிமிடங்கள் ஆகிறது. இந்த சாலையில் சீஸன் நாட்களில் மட்டும் ஒரு நாளைக்கு ஆயிரம் வாகனங்கள் வந்து செல்கின்றன.

வனத்துறை மூலம் வாகனங்களுக்கு நுழைவு கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. இந்த சாலையை சீரமைக்க மலைப்பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ‌வனத்துறை மூலம் ரூ.3 கோடி பணம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டது. இதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், சாலையை சீரமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. அதில் சிறு தரைப் பாலமும் கட்டப்பட உள்ளது.

இதனால் இன்று முதல் வரும் 30ம் தேதி வரை பைக்காரா படகு இல்லம் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்து மாவட்ட வன அலுவலர் கவுதம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Tags

Next Story