நீலகிரி : பிளஸ் 2 தேர்ச்சி விகிதம் அதிகரிப்பு

நீலகிரி மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு அதிகரித்துள்ளது. அதேபோல் அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதமும் அதிகரித்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் 23 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்று உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் குஞ்சப்பனை, ஏகலைவா உண்டு உறைவிட பள்ளி ஆகிய இரண்டு பழங்குடியின பள்ளிகள், கக்குச்சி, அதிகரட்டி, தாவெணெ, ஈளாடா, குன்னூர் அறிஞர் அண்ணா, குன்னூர் மாதிரி பள்ளி ஆகிய 6 அரசு பள்ளிகள் உள்பட 8 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. இதேபோல் 3 அரசு உதவி பெறும் பள்ளிகள் 12 தனியார் பள்ளிகள் என மொத்தம் 23 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2023ம் ஆண்டு அரசுப் பள்ளிகளில் 93.86 சதவீதம் பெற்று 29வது இடத்தில் இருந்தது. இந்நிலையில் இந்த ஆண்டு 94.27 சதவீதம் பெற்று 25வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

Tags

Next Story