ஈரோடு ஆசனூர் வனக்கோட்டத்தில் நீலகிரி எம்.பி ஆ.இராசா ஆய்வு.
எம். பி ராசா ஆய்வு
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட ஆசனூர் வனக்கோட்டத்தில் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.இராசா நேரில் ஆய்வு மேற்கொண்டார். மனித - வன விலங்கு முரண்பாடுகளை தவிர்க்க வனத்துறையின் சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் , தற்போது நடைபெற்று வரும் யானை புகா அகழிகள் மற்றும் ஏற்கனவே அமைக்கப்பட்ட யானை புகா அகழிகளின் தற்போதைய நிலை, சூரிய தொங்கு மின் வேலிகளின் விவரம். விலங்குகளால் ஏற்பட்ட உயிர் இழப்புகள். பயிர் சேதம்.
கால்நடைகள் இழப்பு. உடைமைகள் சேதம் அவற்றிற்க்கு வழங்கப்பட்ட நிவாரண தொகைகள் ஆகியவை குறித்து ஆய்வு செய்தார். தாளவாடி வனச்சரகத்திற்குள்ள நெய்தாளபுரம், கோடம்பள்ளி மற்றும் அல்லாபுரம் தொட்டி ஆகிய கிராமங்களை சுற்றி சுமார் 500 கி.மீ. தூரத்திற்கு புதியதாக யானை புகா அகழி வெட்டும் பணியும், 10 கி.மீ. தூரத்திற்கு பராமரிப்பு பணியும் நடைபெற்று வருவது குறித்தும், அப்பணிகளை விரைந்து முடிக்கவும் எம்.பி ஆ.ராசா அலுலவர்களுக்கு அறிவுறுத்தினார்.