நீலகிரி பள்ளியில் சிறுதானிய உணவு திருவிழா..!
சிறுதானியங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உணவு திருவிழா நடந்தது.
நீலகிரி மாவட்டம் ஊட்டி நசரேத் மேல்நிலை பள்ளியில், சிறுதானியங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 5ம் வகுப்பு மாணவிகள் கலந்துகொண்ட பாரம்பரிய உணவு திருவிழா நடந்தது.
பள்ளி மாணவிகள் காட்சிப் படுத்திய 200க்கும் மேற்பட்ட பாரம்பரிய அரிசி மற்றும் சிறுதானிய உணவு வகைகளை பள்ளி தலைமை ஆசிரியர் ராணி பார்வையிட்டார்.
கடந்த காலங்களில் பாரம்பரிய சிறுதானிய உணவுகளை உண்டு, மக்கள் ஆரோக்கியமாக வாழ்ந்தனர். இந்நிலையில் மக்கள் துரித உணவுகளை உண்டு, ஆரோக்கியமின்றி வாழ்வதை பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு எற்படுத்தும் வகையில் உணவு திருவிழா நடத்தப்பட்டதாக பள்ளி ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
Next Story