நீலகிரி; தேர்தல் பணியாளர்களுக்கான இரண்டாம் கட்ட குலுக்கல்!

நீலகிரி; தேர்தல் பணியாளர்களுக்கான இரண்டாம் கட்ட குலுக்கல்!

நீலகிரியில் தேர்தல் பணியாளர்களுக்கான இரண்டாம் கட்ட சீரற்ற மயமாக்கல் (குலுக்கல்) பணிகள் தேர்தல் பொது பார்வையாளர் தலைமையில் நடந்தது.

நீலகிரியில் தேர்தல் பணியாளர்களுக்கான இரண்டாம் கட்ட சீரற்ற மயமாக்கல் (குலுக்கல்) பணிகள் தேர்தல் பொது பார்வையாளர் தலைமையில் நடந்தது.

நாடாளுமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு, வாக்குச்சாவடி அலுவலர்கள் 1, 2, 3, 4- க்கு, கணினி மூலம் இரண்டாம் கட்ட சீரற்ற மயமாக்கல் (குலுக்கல்) பணிகள் தேர்தல் பொது பார்வையாளர் மஞ்சித் சிங் பரார் தலைமையில் நீலகிரி மாவட்ட கூடுதல் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட தேர்தல் அலுவலரும் ஆட்சியருமான அருணா முன்னிலை வகித்தார். இரண்டாம் கட்ட சீரற்ற மயமாக்கலில் ஊட்டி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட 239 வாக்குச்சாவடி மையங்கள் மற்றும் கூடுதலாக 20 சதவீதம் என 1173 வாக்குச்சாவடி அலுவலர்களும், கூடலூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 224 வாக்குச்சாவடி மையங்கள் மற்றும் கூடுதலாக 20 சதவீதம் என 1108 வாக்குச்சாவடி அலுவலர்களும், குன்னூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 226 வாக்குச்சாவடி மையங்கள் மற்றும் கூடுதலாக 20 சதவீதம் என 1109 வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

நீலகிரி மாவட்டத்திலுள்ள 3 சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட 689 வாக்குச்சாவடி மையங்கள் மற்றும் கூடுதலாக 20 சதவீதம் என மொத்தம் 3391 வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு சட்டமன்ற தொகுதி வாரியாக தேர்தல் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. வருகிற ஏப்ரல் 7ம் தேதி அன்று பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது. இந்த கூட்டத்தில், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) கவுசிக், மகளிர் திட்ட இயக்குநர் காசிநாதன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களும் ஆர்.டி.ஓ., க்களுமான மகராஜ், சதீஸ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) சுரேஷ் கண்ணன், தாசில்தார்கள் சரவணகுமார், சீனிவாசன் (தேர்தல்) உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story