அடிப்படை வசதி இல்லை என ஆட்சியரிடம் வருந்திய கிராம மக்கள்

X
அடிப்படை வசதி இல்லாத கிராமம்
அணிக்காடு கிராமத்தில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
நீலகிரி மாவட்டம் குந்தா தாலுகாவிற்கு உட்பட்ட முள்ளிகூர் ஊராட்சி அணிக்காடு கிராமத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். சுமார் 20 வருடங்களுக்கு மேல் வசித்து வரும் கிராம மக்களுக்கு தேவையான கழிவறை, குடிநீர், தெரு விளக்கு, சமுதாயக்கூடம், கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லை எனவும், பலமுறை ஊராட்சி அலுவலகம் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
மேலும் சுகாதாரமற்ற குடிநீரை பயன்படுத்தி வருவதால் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் பெரும் இன்னல்களுக்கு ஆளாகி வருவதாக கிராம மக்கள் ஊட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளித்தனர்.
Next Story
