பறவைக்காய்ச்சல் நோய் தாக்குதல் எதுவும் இல்லை
ஈரோடு மாவட்டத்தில் பறவைக்காய்ச்சல் நோய் தாக்குதல் எதுவும் இல்லை என கலெக்டர் கூறியுள்ளார்.
ஆந்திரா மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் கோழிகளுக்கு பறவைக்காய்ச்சல் நோய் உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து ஈரோடு மாவட்டத்தில் பறவைக்காய்ச்சல் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தற்போதைய நிலவரப்படி ஈரோடு மாவட்டத்தில் பறவைக்காய்ச்சல் நோய் தாக்குதல் எதுவும் இல்லை கால்நடை பாரமரிப்புத்துறை மூலம் ஈரோடு மாவட்டத்திலுள்ள அனைத்து கோழிப்பண்ணைகள். வெள்ளோடு பறவைகள் சரணாலயம் மற்றும் புறக்கடைக் கோழிகளை நேரில் பார்வையிட்டு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள 50 அதிவிரைவு செயலாக்க குழுக்கள் அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது.
கோழிப்பண்ணையில் அசாதாரண இறப்பு ஏதும் ஏற்பட்டால் உடனடியாக கால்நடை பராமரிப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என பல்வேறு நோய் தடுப்பு நடவடிக்கைகளை கோழிப்பண்ணை உரிமையாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா அறிவுறுத்தியுள்ளார்