மேயர் மீது நம்பிக்கை இல்லை: உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு

மேயர் மீது நம்பிக்கை இல்லை: உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு

மனு அளிக்க வந்த கவுன்சிலர்கள் 

மாநகராட்சி மேயர் மீது நம்பிக்கை இல்லை எனவும் மாமன்ற கூட்டத்தை கூட்ட ஆட்சியர் உத்தரவிடக்கோரி மாமன்ற உறுப்பினர்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர்

காஞ்சிபுரம் மாநகராட்சி பெருநகராட்சி ஆக இருந்து தரம் உயர்த்தப்பட்ட நிலையில், கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதில் காஞ்சிபுரம் மாநகராட்சி 51 வார்டுகளை உள்ளடக்கி உள்ள நிலையில் திமுக அதிக பெரும்பான்மை பெற்றும் , இரு திமுக உறுப்பினர்களிடையே மேயரை பதவி தேர்வு செய்வதில் கடும் போட்டி நிலவி வாக்குப்பதிவு நடைபெற்று மகாலட்சுமி யுவராஜ் பதவியேற்றார்.

இதனைத் தொடர்ந்து மாமன்ற கூட்டங்களில் அவ்வப்போது சலசலப்பும் அதிமுக உறுப்பினர்கள் தங்கள் வார்டுகளை புறக்கணிப்பதாகவும் கூறி மாமன்ற கூட்டத்தில் இருந்து வெளியேறி வந்தனர். ஒரு கட்டத்தில் திமுக உறுப்பினர்களும் மேயருக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி தங்கள் பகுதிகளிலும் மேற்கொள்ளவில்லை எனவும் குற்றம் சாட்டி மாமன்ற கூட்டத்திலிருந்து வெளியேறினர். இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக நாடாளுமன்ற தேர்தல் நன்னடத்தை விதிகள் இருந்ததால் மாமன்ற கூட்டங்கள் நடைபெறாமல் இருந்தது.

நேற்று முதல் நன்னடத்தை விதிகள் அனைத்தும் விலகிக் கொள்ளப்பட்டதால் இந்த மாதத்திற்கான மாமன்ற கூட்டம் நடைபெற உள்ளது. இந்நிலையில், திமுக மண்டல குழு தலைவர்கள் இரண்டு பேர், திமுக, அதிமுக , பாஜக உள்ளிட்ட 35 மாமன்ற உறுப்பினர்கள் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை புரிந்து மாவட்ட ஆட்சியரிடம் தற்போதைய மேயர் மகாலட்சுமி மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர மாமன்ற கூட்டத்தை கூட்ட உத்தரவிட வேண்டும் எனவும் கோரிக்கை மனு அளித்தனர்.இதே மனுவை மாநகராட்சி ஆணையரிடம் அளிக்க காலை முதல் காத்திருந்ததாகவும் அவர் மனுவை பெற இயலாத நிலையில் தற்போது தங்களிடம் வந்துள்ளதாகவும் தங்கள் குறைகளை தெரிவித்துள்ளனர்.

மாவட்ட ஆட்சியர் மனு அளித்தது குறித்து அதிமுக மாமன்ற உறுப்பினர் சண்முகானந்தம் தெரிவிக்கையில், கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக அனைத்து மாமன்ற உறுப்பினர்கள் பகுதிகளில் மக்கள் நலத்திட்டங்கள் ஏதும் நடைபெறவில்லை எனவும் தற்போது மக்கள் கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார்கள். தங்கள் பகுதிக்கு தேவையான திட்டங்களை கொண்டு வர ஏன் தயங்குவதாகவும் பொதுமக்கள் சரமாரியாக கேள்வி கேட்பதால் இதுகுறித்து மேயர் மற்றும் ஆணையரிடம் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் தற்போது மாமன்ற கூட்டத்தைக் கூட்டி மேயர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர உள்ளதால் , நகராட்சி சட்ட விதிகளின்படி மாமன்றத்தை கூட்ட ஆட்சியர் உத்தரவிட வேண்டும் என கோரிக்கை மனு அளித்துள்ளதாக தெரிவித்தனர்.

ஒரு கட்டத்தில் அதிமுக மற்றும் சுயேச்சை பாஜக உறுப்பினர்கள் கூறிவந்த நிலையில் தற்போது திமுக உறுப்பினர்களும் மேயருக்கு எதிராக திரும்பி உள்ள நிலையில் தற்போது காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் பதவி தக்க வைக்கப்படுமா என்பதை கேள்விக்குறியாக உள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story