2 மாதமாக சிலிண்டர் விநியோகம் இல்லை: பொதுமக்கள் போராட்டம்

2 மாதமாக சிலிண்டர் விநியோகம் இல்லை:  பொதுமக்கள் போராட்டம்

காலி கேஸ் சிலிண்டர்களுடன் பொதுமக்கள் போராட்டம் 

சின்னூர் கிராமத்தில் 2 மாதமாக சிலிண்டர் விநியோகம் செய்யாததைக் கண்டித்து பொதுமக்கள் போராட்ம் நடத்தினர்.
தூத்துக்குடி மாவட்டம் புதூர் ஒன்றியம் மாவிலோடை ஊராட்சி சின்னூர் கிராமத்தில் 2 மாதமாக எச்.பி. சிலிண்டர் புக் செய்தும் வினியோகம் இல்லாமல் பொதுமக்கள் அவதி பட்டு வருகிறார்கள். மண்ணெண்ணெய்யும், விறகும் பயன்பாட்டில் இல்லாத நிலையில் பொதுமக்கள் சிலிண்டர் இல்லாமல் அவதிப்பட்டு வருகிறார்கள். இதனால் உடனடியாக சிலிண்டர் வழங்க கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சின்னூர் கிளை சார்பில் புதூர் பஸ் நிலையம் அருகே மெயின் ரோட்டில் 50க்கும் மேற்பட்ட பெண்கள் சிலிண்டரை நடுரோட்டில் வைத்து மறியல் போராட்டம் நடத்தினார்கள். இது குறித்து தகவல் அறிந்த புதூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அவருடன் பேச்சுவார்த்தினார்கள். பின்னர் விளாத்திகுளம் ஹெச்பி சிலிண்டர் டீலருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அவர்கள் எங்களுக்கு சரியான முறையில் சிலிண்டர் சப்ளை செய்யாததால் எங்களால் விநியோகம் செய்ய முடியவில்லை என்று தெரிவித்தனர். இன்னும் இரண்டு நாட்களில் அனைத்து வீடுகளுக்கும் சிலிண்டர் வினியோகம் செய்யப்படும் என்று உறுதி கூறினார்கள் இதை தொடர்ந்து கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டனர் இந்த சம்பவத்தால் புதூர் கிராமத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

Tags

Next Story